» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா குறித்து முகமது யூனுஸின் சர்ச்சை பேச்சு: பிரியாவிடை உரையில் பரபரப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:30:15 PM (IST)
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து விடைபெறும் வேளையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு முகமது யூனுஸ் பேசியிருப்பது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். தற்போது நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (BNP) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், முகமது யூனுஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.தனது 18 மாத கால ஆட்சி குறித்து ஆற்றிய பிரியாவிடை உரையில் முகமது யூனுஸ் குறிப்பிட்டதாவது: வெளியுறவுக் கொள்கை: "எனது பதவிக்காலத்தில் வங்கதேச வெளியுறவுக் கொள்கையில் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை மீட்டுள்ளேன். நாடு எந்த ஒரு வெளிநாட்டிற்கும் அடிபணியவில்லை. பிற நாடுகளின் உத்தரவுப்படி நமது அரசு செயல்படவில்லை."
பொருளாதார மண்டலம்: "நமது கடல் பகுதி என்பது வெறும் புவியியல் எல்லை மட்டுமல்ல; அது உலக நாடுகளுடன் இணைவதற்கான ஒரு நுழைவு வாயில். நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களை (வடகிழக்கு மாநிலங்கள்) உள்ளடக்கிய இந்த பிராந்தியம் மிகப்பெரிய பொருளாதார ஆற்றலைக் கொண்டுள்ளது."
இந்த உரையில் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளான அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இணையாக முகமது யூனுஸ் பட்டியலிட்டுள்ளார்.
இது இந்தியாவின் உள்நாட்டு ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குவது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தனது பதவிக்காலம் முழுவதும் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்ததாக அவர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் உள்ள நிலையில், இந்த இறுதி உரை மேலும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் மக்கள் கொந்தளிப்புஎதிரொலி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 5:10:06 PM (IST)

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் மிக உயரமான பாலம் அழிவு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:51:00 PM (IST)

பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை அமெரிக்கா எதிர்பார்க்கலாம்: ஈரான் ராணுவம் கடும் எச்சரிக்கை!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:31:27 PM (IST)

ரஷ்யாவில் பயங்கரம்: மலைச்சரிவில் மோதி ராணுவ விமானம் விபத்து – 29 பேர் உடல் சிதறி பலி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:49:43 AM (IST)

ஈரான் தாக்குதலில் குவைத் நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம்: இந்தியத் தொழிலாளி உயிரிழப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:34:14 PM (IST)

அமெரிக்கா - ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு ஈரான் மறுப்பு..!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:32:25 PM (IST)

