» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா மீதான இறக்குமதி வரி 10% ஆக குறைப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:21:22 PM (IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு முறையற்றது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மாற்றுச் சட்டப் பிரிவின் கீழ் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை 10% ஆக நிர்ணயித்து வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்’ (IEEPA) கீழ், பரஸ்பர வரி விதிப்பு முறையை அமல்படுத்தினார். இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு கடும் வரி விதிப்புகளை அவர் மேற்கொண்டார். குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக, இந்தியா மீதான வரியை 50% ஆக உயர்த்தினார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இவ்வாறு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து, ‘லேர்னிங் ரிசோர்சஸ்’ (Learning Resources) மற்றும் ‘வி.ஓ.எஸ் செலக்ஷன்ஸ்’ (VOS Selections) ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, "வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது; IEEPA சட்டம் அதிபருக்கு வரி விதிக்க அனுமதி அளிக்கவில்லை" என்று அதிரடித் தீர்ப்பளித்தது.
ட்ரம்பின் புதிய நகர்வு
நீதிமன்றத் தீர்ப்பால் பழைய வரிகள் ரத்தான நிலையில், ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ், 150 நாட்களுக்கு தற்காலிகமாக வரி விதிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளுக்கான வரியை 10% ஆக அவர் நிர்ணயித்துள்ளார்.
இந்தியா குறித்த ட்ரம்பின் கருத்து
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வரி விதிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளிக்கையில்: "இதில் எதுவும் மாறப்போவதில்லை. அவர்கள் வரி செலுத்துவார்கள், நாங்கள் செலுத்த மாட்டோம். இது முன்பு இருந்த நிலைக்கு நேர்மாறானது. பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர், புத்திசாலி. இப்போது இந்தியாவுடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வரி செலுத்துகிறார்கள், ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன."
மேலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்துப் பேசுகையில், "இந்தியாவுடனான எனது உறவு அற்புதமானது. எனது வேண்டுகோளை ஏற்று ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது. உக்ரைன் போரைத் தீர்க்க நாங்கள் விரும்புவதால் அவர்கள் பின்வாங்கினர்," என்று தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை விளக்கம்: இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நாடுகளுக்குமான தற்காலிக வரி 10% ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த வரிச் சலுகை இந்தியாவுக்கும் பொருந்தும்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் ஒரு தீய நாடு; மனிதகுலத்திற்கே சாபக்கேடு : பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 12:06:44 PM (IST)

உடன்பாடு எட்டப்படாவிட்டால் இதுவரை கண்டிராத தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:48:45 PM (IST)

அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி: ஈரான் அரசு அறிக்கை!
புதன் 8, ஏப்ரல் 2026 10:19:15 AM (IST)

இருவார போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு: ஈரான் ஒப்புதல் - ஹார்முஸ் நீரிணை திறக்க முடிவு!
புதன் 8, ஏப்ரல் 2026 10:17:54 AM (IST)

தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:34:47 PM (IST)

ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும்: டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:26:59 AM (IST)

