» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் - ரஷியா போர்நிறுத்தம் தீர்மானம்: ஐ.நா. வாக்கெடுப்பைப் புறக்கணித்தது இந்தியா!
புதன் 25, பிப்ரவரி 2026 5:13:51 PM (IST)
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷியா போர், நேற்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று ஐந்தாவது ஆண்டில் (5-ம் ஆண்டு) அடி எடுத்து வைத்துள்ளது. இன்னும் தீர்வு காணப்படாத இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் சார்பில் வரைவு தீர்மானம் ஒன்று நேற்று கொண்டு வரப்பட்டது.
'உக்ரைனில் நீண்டகால அமைதிக்கு ஆதரவு' என்ற தலைப்பிலான அந்தத் தீர்மானத்தில், இரு நாடுகளுக்கும் இடையே உடனடி, முழு அளவிலான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு விவரம்: இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் உலக நாடுகள் பல்வேறு நிலப்பாடுகளை எடுத்தன ஆதரவாக: 107 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 51 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.
இந்தியாவுடன் சேர்த்து இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளும், அமெரிக்கா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்க முடிவு செய்தன.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்தும் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாதது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்! – கட்டிடங்கள் சேதம்; கடலோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 11:25:20 AM (IST)

இந்தியாவை அவமதிக்கும் சமூக ஊடக பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை
ஞாயிறு 7, ஜூன் 2026 11:20:56 AM (IST)

ஜிடிபி அடிப்படையில் உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா: ரஷிய அதிபர் புதின் பிரகடனம்
வெள்ளி 5, ஜூன் 2026 12:16:30 PM (IST)

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 4, ஜூன் 2026 5:43:08 PM (IST)

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)