» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:17:03 AM (IST)
இந்தியர்களுக்கான விசா இல்லாத பயணத்தை பிரெஞ்சு அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய பிராந்தியமான பிரான்ஸ் வழியாகப் பயணிக்கும் இந்தியர்களுக்கான விசா இல்லாத பயணத்தை பிரெஞ்சு அரசாங்கம் இப்போது செயல்படுத்தியுள்ளது. இந்த முடிவு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த ஆண்டு பிப்ரவரியில் மும்பையில் நடந்த சந்திப்பின் போது பிரதமர் மற்றும் அதிபர் மக்ரோன் இடையே இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான போக்குவரத்து விசா தேவையை நீக்குவது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்கா - ஈரான் இடையே சமரச தூதராகப் பாகிஸ்தான் வெற்றி: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:13:05 PM (IST)

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலைத் திசைதிருப்ப டிரம்ப் முயற்சி: ஈரான் பகிரங்கக் குற்றச்சாட்டு!
சனி 13, ஜூன் 2026 12:02:06 PM (IST)

இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் இல்லை: நேபாள அரசு விளக்கம்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:52:52 AM (IST)

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் ராணுவம்: மீறும் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு..!
வியாழன் 11, ஜூன் 2026 5:27:20 PM (IST)

ஹெலிகாப்டர் விபத்தால் வெடித்த மோதல்: ஈரான் மீது 2-ஆவது நாளாக அமெரிக்கா தாக்குதல்!
வியாழன் 11, ஜூன் 2026 12:31:12 PM (IST)

இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து மழை!
புதன் 10, ஜூன் 2026 5:26:56 PM (IST)


