» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 21 பேர் பலி; 61 பேர் படுகாயம்!
செவ்வாய் 5, மே 2026 11:14:44 AM (IST)
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 61 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவிற்கு உட்பட்ட லியுயாங் (Liuyang) நகரம், உலகின் மிக முக்கிய பட்டாசு உற்பத்தி மையமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள 'ஹுவாஷெங் (Huasheng) பட்டாசு உற்பத்தி மற்றும் காட்சிப்படுத்துதல்' தொழிற்சாலையில் நேற்று (மே 4, 2024) மாலை சுமார் 4:43 மணியளவில் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், தொழிற்சாலையின் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாகக் காணப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். 61 பேர் படுகாயமடைந்துள்ளனர்; அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுமார் 480-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் 3 மீட்பு ரோபோக்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே இரண்டு வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், இரண்டாவது விபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த தொழிற்சாலையின் நிர்வாகிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லியுயாங் நகரம், சீனாவில் விற்பனையாகும் பட்டாசுகளில் 60 சதவீதத்தையும், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளில் 70 சதவீதத்தையும் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)


