» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி!

செவ்வாய் 23, ஜூன் 2026 12:42:28 PM (IST)



கத்தார் நாட்டில் உள்ள இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்திற்கு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதல்களின் பின்னணியில், கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையின் ஏற்றுமதி முனையம் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது போர் நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் காரணமாகப் பதற்றம் தணிந்துள்ள நிலையில், கத்தார் அரசு மூடிக்கிடந்த முனையத்தை மீண்டும் இயக்கி உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டது.

கத்தாரில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் ஊழியர்களும் பொறியாளர்களும் மறுசீரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குப் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 66 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும், மாயமான தொழிலாளர்களை மீட்கும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய அமைச்சர் இரங்கல் : 

இந்தச் சம்பவத்திற்கு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஆழ்ந்த வேதனையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். கத்தார் அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும், விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory