» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தில் இந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்துடன் படுகொலை: 2 பேர் கைது!

ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:17:30 PM (IST)

Hindufamilymurdr.jpg

வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் வீட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ரங்பூர் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணபதி சக்ரவர்த்தி (65) – ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், அவரது மனைவி பிரிதிலதா (50),  மகள் அகாமி, மகன் பிரியம் எனத் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக முக்தோ மற்றும் சித்தார்த்தா ஆகிய இரு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். 

இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர்.வியாழக்கிழமை இரவு, அருகில் உள்ள கட்டிடத்தின் வழியே கணபதி சக்ரவர்த்தியின் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற இருவரும் அங்கு 'யாபா' என்ற போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். மாடியில் சத்தம் கேட்டதையடுத்து மேலே சென்ற கணபதி சக்ரவர்த்தி, அங்கு அனுமதியின்றி நின்றிருந்த இருவரையும் தட்டிமேட்டுக் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரங்பூர் மாநகரக் காவல் ஆணையர் முகமது அப்துல் மபூத் செய்தியாளர்களிடம் விவரங்களை வெளியிட்டுள்ளார். கைதான இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory