» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்: தெற்கு ரயில்வே தகவல்
வெள்ளி 25, நவம்பர் 2022 3:13:21 PM (IST)
தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவது என்று தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி எர்ணா குளத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் செல்லும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3.40 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான் கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும். மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புழல் சிறையிலிருந்து தாக்கல் செய்த ஹரி நாடார் மனு தள்ளுபடி: தேர்தல் அலுவலர் அதிரடி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 9:07:53 PM (IST)

நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)

மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)

