» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி குறுவட்ட மேஜை பந்து போட்டி: ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்
புதன் 31, ஜூலை 2024 8:12:43 PM (IST)

தென்காசி குறுவட்ட அளவிலான மேஜை பந்து விளையாட்டுப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
தென்காசி குறுவட்ட அளவிலான மேஜை பந்து விளையாட்டுப் போட்டிகள் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான ஜூனியர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் அருள் ஆனந்த ஜெபர்சன் முதலிடமும், இரட்டையர் பிரிவில் அருள் ஆனந்த ஜெபர்சன் , அஸ்வின் ராஜ் ஆகியோர் முதலிடமும் பெற்றனர்.
சீனியர் மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் ஸ்ரையேல் சச்சின் சிண்டே முதலிடமும், இரட்டையர் பிரிவில் ஸ்ரையேல் சச்சின் சிண்டே, வெங்கடேஷ் ஆகியோர் முதலிடமும், சூப்பர் சீனியர் மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் மாதேஸ்வரன் முதலிடமும், இரட்டையர் பிரிவில் மாதேஸ்வரன், ஆண்டன் அன்ஸ்டீன் முதலிடமும் பெற்றனர்.
பெண்களுக்கான ஜூனியர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி நந்திதா பார்கவி முதலிடமும், இரட்டையர் பிரிவில் நந்திதா பார்கவி, தன்ஷிகா ஆகியோர் முதலிடமும், சீனியர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி மாணிக்க ஸ்ரீ முதலிடமும், இரட்டையர் பிரிவில் மாணிக்க ஸ்ரீ, சஹானா முதலிடமும், சூப்பர் சீனியர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி மதுபாலா முதலிடமும், இரட்டையர் பிரிவில் மதுபாலா, ரித்து வர்ணா முதலிடமும் பெற்றனர்.இவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான மேஜை பந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமை ஆசிரியை குழந்தை தெரேசா, உதவி தலைமையாசியை முனைவர் சுப்பம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராமர், சதீஷ்குமார், கலையரசன், நாராயணன், பால்மதி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

