» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகன்கள் 3பேர் கைது!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 11:41:20 AM (IST)
தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் அவரது 2 மகன்களை போலீசார் கைது செய்தனரி்.
தூத்துக்குடி அருகே உள்ள நடு செக்காரக்குடியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் பூமணி (30), இவருக்கும் மேல செக்காரக்குடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சந்திரசேகர் (52) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்க முன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக தட்டப்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது 2 பேரும் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில், பூமணி நேற்று மேல செக்காரக்குடியில் ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த சந்திரசேகர் மற்றும் அவரது மகன்கள் இசக்கி செல்வம் (35), மாடசாமி (25) ஆகிய 3 பேரும் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த பூமணி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தட்டப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குணசுந்தர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சந்திரசேகர் மற்றும் 2 மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)



POOLAMANIAug 12, 2024 - 10:11:57 PM | Posted IP 172.7*****