» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:18:37 PM (IST)
திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தலின் படி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் வேண்டுகோளுக்கினங்க டிசிடபிள்யூ நிறுவனம் திருச்செந்தூர் அரசு மருத்துவ மனையை சுத்தம் செய்ய தினமும் 2 சுகாதார பணியாளர்களை நியமனம் செய்துள்ளது.
கோட்டாட்சியர் சுகுமாறன், காவல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபால கிருஷ்ணன், மருத்துவர் சுமதி மற்றும் டிசிடபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று முதல் அப்பணி துவங்கப்பட்டது.
மனிதம்Aug 13, 2024 - 01:26:52 AM | Posted IP 162.1*****