» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை: தாய்க்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:25:43 PM (IST)
கல்லிடைக்குறிச்சியில் குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவரது தாயும் தற்கொலைக்கு முயன்றார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு பெண்ணும், அவருடைய மகளும் குதித்து தண்ணீரில் தத்தளித்தனர். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உடனே கிணற்றில் இறங்கி 2 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயையும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் அம்பை பண்ணை சங்கரையா நகரைச் சேர்ந்த சுந்தரராஜன் மனைவி ஜோதி (வயது 36), அவர்களுடைய மகள் ஆனி ரோஸ் (11) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது.
மேலும் ஜோதியும், சுந்தர்ராஜனும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்ததாகவும், பின்னர் சுந்தர்ராஜன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுந்தர்ராஜனுக்கும், ஜோதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜோதி, மகள் ஆனி ரோசுடன் கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதற்காக வந்துள்ளார்.
அங்கு முதலில் தனது மகளை குதிக்கும்மாறு கூறினார். தாயின் பேச்சைக் கேட்டு ஆனி ரோஸ் கிணற்றில் குதித்தாள். அதன்பின்னர் ஜோதி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தில் ஆனி ரோஸ் இறந்ததும் ெதரியவந்தது. கல்லிடைக்குறிச்சியில் குடும்ப தகராறில் தாயுடன் கிணற்றில் குதித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)




