» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூர் கோவிலில் வெயிலில் காத்துக் கிடக்கும் பக்தர்கள்!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 10:38:34 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் சுற்றுப் பிரகாரத்தில் மேற்கூரை இல்லாததால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வெயிலில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Sakthi Murugan: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கூரை இல்லாததால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வெயிலில் பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பொது தரிசனம் செல்லும் மக்கள், பெரியவர்கள், கைக்குழந்தைகளுடன் கடும் வெயிலை சந்தித்து வருகின்றனர். பல கோடி வருமானம் வருமானத்தை அள்ளித்தரும் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து தராமல் தமிழக அரசும், அறநிலைத்துறையும் புறக்கணித்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மக்கள் கருத்து

undiyal varumaanamAug 14, 2024 - 01:50:11 PM | Posted IP 162.1*****

kovil undiyal varumanathil mattum kuriyaga irukkum arasu.... bakthargaluku thevayana entha adippadai vasathigalayum murayaga seyvathillai....

kichaAug 14, 2024 - 09:58:16 AM | Posted IP 172.7*****

பல கோடி வருமானம்

அது தான்Aug 14, 2024 - 08:34:43 AM | Posted IP 172.7*****

அரசுக்கும் மூளை இல்லை

kannanAug 14, 2024 - 07:09:36 AM | Posted IP 162.1*****

குட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory