» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:12:00 AM (IST)
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல் - நாகர்கோவில், சென்னை சென்டிரல் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06055) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்னை ஆவடி வரும் ஏ.சி.அதிவிரைவு சிறப்பு ரயில் (06056) மறுநாள் காலை 5.10 மணிக்கு ஆவடி வந்தடையும். இந்த ரயில் சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் போது ஆவடி செல்லாது. நாகர்கோவிலில் இருந்து வரும் போது ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். சென்டிரல் ரயில் நிலையம் செல்லாது.
சென்டிரல் - கொச்சுவேலி
இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் 21-ந்தேதி மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில் (06043) மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் 22-ந்தேதி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏ.சி.எக்ஸ்பிரஸ் ரயில் (06044) மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்டிரல் வந்தடையும். கொச்சுவேலியிலிருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் கூடுதலாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
