» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 3:31:32 PM (IST)
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்டகுறுவட்டங்களில் வருகின்ற வருகிற 6ஆம் தேதி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அடங்கிய குழு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்கள்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் தூத்துக்குடி வட்டத்தில் 18.09.2024 அன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளார். இத்திட்ட நடைமுறைகளின்படி பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 06.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை தூத்துக்குடி குறுவட்டத்தில் மீளவிட்டான் பகுதி -1 கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திலும், புதுக்கோட்டை குறுவட்டத்தில், முள்ளக்காடு பகுதி - 2 கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திலும், கீழத்தட்டப்பாறை குறுவட்டத்தில், கீழத்தட்டப்பாறை பஞ்சாயத்து அலுவலகத்திலும், முடிவைத்தானேந்தல் குறுவட்டத்தில் கூட்டுடன்காடு கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திலும் பெற உள்ளனர்.
எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பலனடையலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
அயினுச்செல்விSep 5, 2024 - 09:44:56 AM | Posted IP 162.1*****
ஐயா எங்கள் கிராமத்தில் 10, மற்றும் 8வகுப்புபடித்தமுன்னாள்மா ணவர்மாணவிகள்இருக்கின்றன அதனால் எந்த ஒரு வேலையையும் இல்லை அதனால் வேலை வேண்டும்
S, JOHNSON JAYAKUMARSep 4, 2024 - 11:08:01 AM | Posted IP 172.7*****
வீட்டுக்கு பைப்பு லைன் இன்னும் வரவில்லை மாப்பிள்ளை உறுதி பஞ்சாயத்து பகுதிக்கு ஏன் மற்ற பகுதிக்கு எல்லாம் வந்து விட்டது ஆனாலும் தண்ணீர் இன்னும் வரவில்லை இங்கே பைப் லைன் வரவே இல்லை ஏன் இந்த ஏரியாவை மாநகராட்சியுடன் இணைத்தால் நல்லா இருக்கும்
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் காதலைக் கைவிட மறுத்த அக்கா சரமாரி வெட்டிக்கொலை: தம்பி வெறிச்செயல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:02:04 PM (IST)

முதல்வர் விஜய்யின் புகைப்படத்திற்கு அருகே அமர மறுக்கும் மேயர்: நெல்லையில் சர்ச்சை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:05:42 AM (IST)

தனிநபர் கடன், கல்விக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திங்கள் 8, ஜூன் 2026 4:16:17 PM (IST)

நெல்லை - தென்காசி வழித்தட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 10:56:37 AM (IST)



A.MurugeshwariSep 5, 2024 - 01:15:26 PM | Posted IP 162.1*****