» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் வ.உ.சி பிறந்த நாள் விழா!
வியாழன் 5, செப்டம்பர் 2024 10:16:39 AM (IST)

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில் தலைவர் டி.ஏ. தெய்வநாயகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் மீனாட்சிநாதன், பொருளாளர் தளவாய், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், செந்தில் ஆறுமுகம், ஸ்ரீதர், எல்ஐசி கிட்டு, கோமதிநாயகம், மூர்த்தி, பாலன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

வ.உ.சி., நற்பணி மன்றம்: தூத்துக்குடி வ.உ.சி., நற்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் செந்தில் ஆறுமுகம் வ.உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில் வீரபாகு, பொருளாளர் மகாராஜன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ராஜேந்திரன், குற்றாலிங்கம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்து முன்னணி : தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் தலைவர் பாலமுருகன் வஉசி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநகர தலைவர் ராகவேந்திரா, சுடலைமணி, சங்கர் விஜய இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)
