» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இயற்கை ஆர்வலர் எம்.ஏ.தாமோதரனுக்கு கிரீன் சாம்பியன் விருது: மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!
வியாழன் 5, செப்டம்பர் 2024 10:31:42 AM (IST)

தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது பெற்றுள்ள இயற்கை ஆர்வலர் எம்.ஏ.தாமோதரன், மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
ஆண்டு தோறும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக செயல்படும் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனி நபர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவானது தேர்ந்தெடுத்து, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும். சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பித்து அதில் தேர்வானவர்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு "கிரீன் சாம்பியன் விருதும்" சான்றிதழும், ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவருமான எம்.ஏ.தாமோதரனுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர் எம்.ஏ. தாமோதரன் தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பசுமை குறுங்காடுகளையும், பசுமை குறும்பூங்காவனங்களையும் உருவாக்கி நாட்டின் பசுமை போர்வையை மேம்படுத்த சிறப்பாக சேவையாற்றியுள்ளார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் 16 லட்சத்துக்கும் மேலான பனைவிதைகளை நடவு செய்து, தமிழகத்தின் தேசிய மரமான பனைமரங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அமைச்சர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் மூலமாக பசுமை பாதுகாவலன், பசுமை தோழன், பசுமை நாயகன், பசுமை செந்துளிர் என பல விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளார். தற்போது தமிழக அரசின் சுற்றுச் சூழலுக்கான உயரிய விருதான "கிரீன் சாம்பியன் விருது" பெற்றுள்ள எம்.ஏ. தாமோதரன் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றார். வாழ்த்துக்களை பெற்ற பெற்ற கிரீன் சாம்பியன் எம்.ஏ.தாமோதரன் மேயருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

ஒருவன்Sep 5, 2024 - 10:56:40 AM | Posted IP 172.7*****