» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கில் 13ம் தேதி ஆஜராவேன்: சபாநாயகர் அப்பாவு
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 5:02:18 PM (IST)

அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி விளையாட்டு அரங்கில், இன்று (10.09.2024) முதலமைச்சர் கோப்பை 2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை.
எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன். அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல முதுநிலை மேலாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பா.சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.கிருஷ்ணசக்கரவர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாநகராட்சி கவுன்சிலர் பேச்சியம்மாள், முக்கிய பிரமுகர் சித்திக் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)


