» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாநகராட்சியுடன் 12 பஞ்சாயத்துகள் இணைப்பு: வள்ளியூர் நகராட்சி ஆகிறது!
திங்கள் 30, செப்டம்பர் 2024 8:59:37 AM (IST)
நெல்லை மாநகராட்சியுடன் 12 பஞ்சாயத்துகள் இணைக்கப்படுவதுடன், வள்ளியூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகளும் உருவாக்கப்படுகிறது. இதற்கான உத்தேச பட்டியல் நேற்று வெளியானது.
அதன்படி நெல்லை மாநகராட்சியுடன் அருகாமையில் உள்ள 12 பஞ்சாயத்துகள் இணைக்கப்படுகின்றன. அதாவது தாழையூத்து, புதுப்பேட்டை, சுத்தமல்லி, தென்பத்து, ராமையன்பட்டி, கொண்டாநகரம், ரெட்டியார்பட்டி, கீழநத்தம், பாளையஞ்செட்டிகுளம், இட்டேரி, முன்னீர்பள்ளம் மற்றும் நொச்சிகுளம் ஆகிய பஞ்சாயத்துகள் இணைக்கப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் தாழையூத்து பஞ்சாயத்தில் 9,013 மக்கள் தொகையும், புதுப்பேட்டையில் 4,786 பேர், சுத்தமல்லியில் 19,500 பேர், தென்பத்தில் 3,886 பேர், ராமையன்பட்டியில் 9,204 பேர், கொண்டாநகரத்தில் 2,052 பேர், ரெட்டியார்பட்டியில் 15,150 பேர், கீழநத்தத்தில் 11,570 பேர், பாளையஞ்செட்டிகுளத்தில் 2,034 பேர், இட்டேரியில் 824 பேர், முன்னீர்பள்ளத்தில் 8,010 பேர், நொச்சிகுளத்தில் 5,672 பேர் என மொத்தம் 12 பஞ்சாயத்துகளில் 91,701 பேர் உள்ளனர். 12 பஞ்சாயத்துகளும் சேர்த்து மொத்தம் 95.43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது.
12 பஞ்சாயத்துகளும் சேர்க்கப்பட்ட பிறகு நெல்லை மாநகராட்சி 5,66,539 மக்கள் தொகை கொண்டதாகவும், 204 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் இருக்கும்.
இதுதவிர நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயருகிறது. வடக்கு வள்ளியூர் பேரூராட்சி மற்றும் தெற்கு வள்ளியூர் பஞ்சாயத்து பகுதிகளை இணைத்து வள்ளியூர் நகராட்சி உருவாக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)
