» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார்: சபாநாயகர் அப்பாவு
திங்கள் 30, செப்டம்பர் 2024 10:14:07 AM (IST)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் சாமானிய மக்களுக்கு இந்த அரசு நிறைய பணிகளை செய்து கொண்டு இருக்கிறது. அது இன்னும் வேகமாக செயல்படுவதற்கு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த அரசுக்கு துணையாக இருப்பார்.
இந்தியாவில் எந்த பதவி வழங்கினாலும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. பிரதமருக்கு விமர்சனம் இல்லையா? முதல்-அமைச்சருக்கு விமர்சனம் இல்லையா? விமர்சனம் செய்யதான் செய்வார்கள் அதான் அரசியல். எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியின் நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவது அது மக்களுக்கு நன்மையான காரியமாகும். குறை சொல்பவர்கள் எந்த தவறும் செய்யாத மனிதன் மீது எந்த குறையும் கூறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.