» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வழக்கறிஞர் மீது பொய்யான வழக்குப் பதிவு : எஸ்பியிடம் மனைவி புகார்!
திங்கள் 30, செப்டம்பர் 2024 12:08:35 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிசிஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்த ஏனோக் மேன்லின் மனைவி கன்னியம்மாள் (எ) உஷா (36) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், "எனது கணவர் ஏனோக் மேன்லின் என்பவர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 24.09.2024 அன்று என்னை சாதி ரீதியாக கொடுமைப்படுத்தியதாக நான் Dr.சுந்தரலிங்கம் சாந்தி பேக்கரி செந்தில், சௌந்திர பாண்டிய நாடார், கூலிப்படை தலைவர் பாண்டி, புருஷோத்தமன் ஆகியோர் மீது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தேன்.
அப்புகார் மனு மீதான எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல எனது கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கி தலித் சமுதாயத்தை சார்ந்த ஒருவரை வைத்து என் கணவருக்கு எதிராக புகார் மனு பெற்றுக்கொண்டு என் கணவர் மீது சட்ட முரணான வழக்குப்பதிவு செய்துள்ளார். என் கணவர் மீது பதியப்பட்ட வழக்கு பற்றியோ, எனது கணவருக்கு எதிராக புகார் அளித்த நபர் பற்றியோ எந்த விபரமும் எனக்கு தெரியாது.
நான் கடந்த 24.09.2024 அன்று அளித்த புகார் மனுக்கு பொய்யான காரணங்களை உருவாக்கி Dr.சுந்தரலிங்கம் என்பவரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு என் கணவர் மீது காவல்துறை அதிகாரிகள் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று காலை 9 மணி அளவில் அன்று வீட்டிற்கு வந்து எனது கணவரை கைது செய்த போது தான் மேற்படி விபரம் தெரியவந்தது.
பொய்யான குற்றச்சாட்டுகளை கொண்டு எனது கணவரை கைது செய்ததால் எனது கணவருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல், Low BP போன்ற வலிகள் எனது கணவருக்கு மன அழுத்தத்தால் ஏற்பட்டுள்ளது. எனவே எனது கணவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது காவல்துறை அதிகாரிகள் எனது கணவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி எனது கணவரை மிரட்டி வருகின்றனர். எனது சட்ட முரணாக செயல்பட்டு வரும் மத்திய பாகம் காவல் அதிகாரிகள் மற்றும் டவுண் ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கும்படி எனது கணவரை உயிருடன் மீட்டுத் தரும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

kannanSep 30, 2024 - 05:56:59 PM | Posted IP 162.1*****