» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் மனு அளிக்க 8 தனித்தனி பிரிவுகள் : ஆட்சியர் கார்த்திகேயன் ஆய்வு
திங்கள் 30, செப்டம்பர் 2024 5:52:02 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பொதுமக்கள் மனுக்கள் அளிக்க 8 தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (30.09.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்களை பதிவு செய்வதற்கு 8 தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கள் பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்ததோடு, வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்கு அருகில் அமைந்துள்ள வாழ்வாதார வழிகாட்டி மையத்திற்கு அனுப்பி தீர்வு காணப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் : அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:44:21 AM (IST)

பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி
வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:16:26 AM (IST)

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)
