» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அரசு எச்சரிக்கை!

புதன் 27, நவம்பர் 2024 11:27:38 AM (IST)

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பொதுமக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற தவறான தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது. சில நிறுவனங்கள், பேருந்துகளில், கடைகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன.

இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை பணப்பரிமாற்றத்தின் போது வாங்க மறுப்பதோ அல்லது செல்லாது என கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். எனவே, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை அவமதிக்கும் வகையில், நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடை உரிமையாளர், எரிபொருள் நிலைய உரிமையாளர், வங்கி அலுவலர் மற்றும் பேருந்து நடத்துனர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory