» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்
புதன் 27, நவம்பர் 2024 4:36:24 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.11.2024) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கை மனுக்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனம், வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து, 3 பயனாளிகளுக்கு தலா ரூ.13,500 மதிப்பிலான தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் மதிப்பிலான (எழுத்துக்களை பெரிதாக காட்டும் கருவி) உருப்பெருக்கிகளும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பில் பிரெய்லி கை கடிகாரம் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.95,500 மதிப்பிலான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், இன்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். பாளையங்கோட்டையிலுள்ள பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் கண் தெரியாத மாணவனுக்கு பிரெய்லி கை கடிகாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி, அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
மேலும், 10-ஆம் வகுப்பு படிக்கும் பார்வை குறைபாடு உள்ள மாணவனுக்கு கல்வி பயில்வதற்கு ஏதுவாக எழுத்துக்களை பெரிதாக காட்டும் கருவி உருப்பெருக்கி கருவியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை பெற்ற மாற்றுத்திறன் மாணவர்கள் தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் , திறன் உதவியாளர் லட்சுமணன், பேச்சு பயிற்சியாளர் அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

