» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கேரள அரசின் லாட்டரி குலுக்கலில் பால் பண்ணை ஊழியருக்கு ரூ.12 கோடி பரிசு..!!
வெள்ளி 6, டிசம்பர் 2024 11:21:05 AM (IST)
கேரள அரசின் பூஜா பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கலில் பால் பண்ணை ஊழியருக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526) விழுந்தது தெரியவந்தது. முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 41) வாங்கியுள்ளார். இவருக்கு வரிகள் பிடித்தம் போக ரூ.6.12 கோடி கிடைக்க உள்ளது.லாட்டரியில் முதல் பரிசு வென்றுள்ள தினேஷ்குமார், நீண்ட காலமாக லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டவராம். இது குறித்து தினேஷ்குமார் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 டிக்கெட்டுகளை வாங்குவேன்.அப்படித்தான் இந்த முறையும் 10 டிக்கெட்டுகள் வாங்கியதில் ஒரு டிக்கெட்டிற்கு பரிசு அடித்துள்ளது பால் பண்ணையில் ஊழியராக பணி செய்து வருகிறேன். லாட்டரியில் பரிசு அடிப்பது இதுவே முதல் முறையாகும்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)



இவன்Dec 6, 2024 - 11:45:48 AM | Posted IP 162.1*****