» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தென்காசி மாவட்ட சகோதரிகள்!
வெள்ளி 6, டிசம்பர் 2024 5:52:35 PM (IST)

யோகா, ரோலர் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் செய்தும் தொடர்ந்து பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் கடையம் இரவணசமுத்திரத்தை சேர்ந்த வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மருத்துவ கல்லூரி மாணவி மிஸ்பா குற்றாலம் செய்யது பள்ளி மாணவி ஷாஜிதா ஆகிய சகோதரிகள் சாம்பியன் உலக சாதனை புத்தகத்திற்கு தேர்வாகி உள்ளனர்.
இதன் விபரம் வருமாறு.. தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரான முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதிகளின் மகள்கள் குற்றாலம் செய்யது பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சாதனைச்சுடர் விருது பெற்ற ஷாஜிதா ஜைனப், வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி முதலாமாண்டு பி.என்.ஒய்.எஸ் மாணவி சிங்கப்பெண் விருது பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபா ஆகிய சகோதரிகள் யோகா, ரோலர் ஸ்கேட்டிங்கில் போட்டிகள் மட்டுமில்லாமல் பல சமூக விழிப்புணர்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.
பல விருதுகளையும் வாங்கி குவித்து வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி ஆசிரியராக குற்றாலம் குருகண்ணன் என்பவர் இருந்து வருகிறார், இந்த அக்கா/தங்கை கல்வியுடன் இவர்களது சாதனைகள்,சமூக விழிப்புணர்வு நிகழ்வுகள் அனைத்தும் அனைவராலும் பாராட்டும் விதம் அமைந்துள்ளது இவர்களது திறமைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் ராம்ஹஞ்ச் மண்டி மாவட்டம் கோட்டாவில் உள்ள சாம்பியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட் என்ற அமைப்பு சாதாரண குடும்ப வர்க்கத்தை சார்ந்த இச்சகோதரிகளை சாதனை புத்தகத்தில் இடம் பெற தேர்வு செய்து சாம்பியன் உலக சாதனை புத்தக சான்றிதழ் வழங்க முன் வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)




