» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழச்சிக்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயசீலன், துணைத்தலைவர் சிவன்பாண்டி, பொருளாளர் ரேவதி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்து, புத்தகக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நடுவர் எண் : 1 - நீதிமன்ற நீதிபதி கடற்கரை செல்வம், குற்றவியல நடுவர் எண் : 2- நீதிமன்ற நீதிபதி பீட்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், மூத்த வழக்கறிஞர்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

GM SANKAR GANESHMar 21, 2025 - 03:02:14 PM | Posted IP 162.1*****