» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 21, மார்ச் 2025 8:36:55 AM (IST)
2 வழக்குகளில் முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தென்காசி மாவட்டம் தாைழ சுப்பிரமணியபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றிேனன். கடந்த செப்டம்பர் மாதம் என் மீதான புகாரின்பேரில் என்னை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
அப்போது இருந்து எனக்கு வழங்க வேண்டிய வாழ்வாதார உதவித்தொகையை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இதனால் போதிய வருமானம் இன்றி எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எனக்கு சேர வேண்டிய தொகையை வழங்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி மனதாரருக்கு உரிய நிலுவைத்தொகை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். விசாரணை முடிவில், மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் அவருக்கு பல மாதங்களாக வாழ்வாதார உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இது அடிப்படை விதிகளுக்கு முரணானது. இதன் மூலம் மனுதாரருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், சிரமத்தையும் கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். இதை கூற இந்த கோர்ட்டு தயங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அபராதம் விதித்து அதன் மூலம் மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது இந்த கோர்ட்டின் கடமை.
எனவே மனுதாரருக்கு சேர வேண்டிய உதவித்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். மேலும் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக 2 வாரத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு: இதே போல ரஞ்சித் முருகன் என்பவருக்கு பணியிடை நீக்க காலத்தில் வாழ்வாதாரத்தொகை வழங்காததால் அவருக்கும் ரூ.50 ஆயிரத்தை இழப்பீட்டு தொகையாக தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்கும்படி இதே நீதிபதி உத்தரவிட்டார். ஆக மொத்தம் 2 வழக்குகளில் ரூ.1 லட்சம் முதன்மை கல்வி அதிகாரிக்கு அபராதமாக விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
சனி 26, ஏப்ரல் 2025 10:31:17 AM (IST)

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)
