» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரம்: போலீஸ் உதவி கமிஷனரும் பணியிடை நீக்கம்!

வெள்ளி 21, மார்ச் 2025 8:38:50 AM (IST)

நெல்லை முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரத்தில் உதவி கமிஷனர் மீதும் பணி இடைநீக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

நெல்லையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை அபகரிக்க முயன்றதாக கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக் மீது நெல்லை டவுன் போலீசில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி புகார் அளித்திருந்தார். மேலும் அவர், தவுபிக்கிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ‘வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.

போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஜாகீர் உசேன் பிஜிலி கடந்த 18-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய தவுபிக்கை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

ஜாகீர் உசேன் பிஜிலி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட காரணத்துக்காக நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இதைத் தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டார்.

ஜாகீன் உசேன் பிஜிலி புகார் அளித்த சமயத்தில் நெல்லை டவுன் உதவி கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் மீதும் துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் தற்போது கோவை நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் செந்தில்குமார் மீதும் பணி இடைநீக்க (சஸ்பெண்டு) நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory