» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி டூ சென்னைக்கு விமானத்தில் பறந்த மாணவர்கள்: கனவை நிறைவேற்றிய ஆசிரியர்!
வெள்ளி 21, மார்ச் 2025 3:09:37 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மாணவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற பள்ளி தலாைமை ஆசிரியரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ். சிறுவயது முதலே மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டி வந்தவர். இவர் ஆசிரியர் பணியில் கடந்த 2000 ஆம் ஆண்டில் சேர்ந்தார். முதல் முதலாக கூட்டாம்புளி றி.என்.டி.றி.ஏ தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தவுடனே மாணவர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து பல உதவி செய்ய ஆரம்பித்தார். படிக்க மிகவும் கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
இதனால் பல்வேறு தரப்பில் இவருக்கு பாராட்டு கிடைத்து வந்தது. 2012 ஆம் ஆண்டு செய்துங்கநல்லூர் றி.என்.டி.றி.ஏ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். அங்கு படித்த மாணவர்களோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குழந்தைகள் படித்தனர். அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதலில் திட்டமிட்டார். பள்ளி மாணவ மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகரான சீருடை, சூ, டை, ஐடி கார்டு என ஏழை தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகளின் தரத்தினை உயர்த்தினார்.
அதோடு மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர் கல்வி கற்க இவர் செலவில் கம்ப்யூட்டர் வாங்கி அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார். செல்போனை கூட அறியாத மாணவர்கள் கம்யூட்டரில் அமர்ந்து கி.போர்டில் வேலைசெய்து முகம் மகிழ்ந்தனர். பள்ளியில் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தி அந்த மாணவர்களை மேடை ஏற்றி கௌரவித்தார். தங்கள் குழந்தைகளின் ஆடை மற்றும் பேச்சு திறமைகண்டு பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் வடிததனர்.
நூற்றாண்டை கடந்த பள்ளி என்பதற்காக நினைவு தூண் ஒன்றை பள்ளி வளாகத்தில் அமைத்தார். இந்த பணியை முன்னாள் ஆசிரியர் உதவியுடள் செய்தார். இதற்கிடையில் 2014ல் இவருக்கு பணிமாறுதல் உத்தரவு வந்தது. இவர் தூத்துக்குடி அருகில் உள்ள பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளிக்கு மாறுதல் அடைந்தார். அப்போது அங்கு இருந்ததோ 7 மாணவ மாணவிகள்தான். இவரது அயராத உழைப்பால் இன்று 50 மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் படிக்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் தான் கொரோனா தொற்று நோய் வந்தது. உலகத்தினையே கட்டிப்போட்டது.
அப்போது கிடைத்த சம்பளம் ரூ. 7 லட்சத்தினை கொண்டு பள்ளியில் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்தார். இவரின் செயலை கண்டு எல்லோரும் மகிழந்தனர். அன்பாசிரியர், சிறப்பாசிரியர் என பட்டம் கொடுத்து மகிழ்ந்தனர். தமிழக அரசு நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவித்தது. மற்ற அன்பர்களிடம் உதவி பெற்ற 17 லட்ச ரூபாய் செலவில் மற்றுமொரு கட்டிடம் இந்த பள்ளியில் கட்டப்பட்டது. தொடர்ந்து இவர் கட்டிய கட்டித்துக்கு மேல் முன்னாள் மாணவர் உதவியுடன் 4 லட்சம் செலவில் மேலும்மொரு கட்டிடம் கட்டி அதில் ஆசிரியர் 1 லட்சத்து 20ஆயிரம் செலவில் டிஜிட்டல் திரை ஒன்றை அமைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நவீன முறையில் பாடம் நடத்தி வருகிறார்.
தனது ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் பாடம் நடதிக் கொண்டிருந்தபோது பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் விலங்குகள் குறித்தும், சமூக அறிவியல் பாடத்தில் போக்குவரத்து குறித்தும் பாடம் இருந்தது. அது பற்றி நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவன், "தினமும் எங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. அருகில் தான் ரயில் செல்லும் சத்தம் கேட்கிறது ஆனால் நாங்கள் ஒரு நாளும் விமானத்திலும் ரயிலிலும் பயணம் செய்ய வில்லை” என ஏக்கமாக தெரிவித்துள்ளார்கள். "விலங்குகளை பார்க்க வேண்டும் என்றால் வண்டலூர் மிருககாட்சி சாலைக்குத்தான் செல்லவேண்டும்.
ஆனால் எங்கள் வறுமையில் நாங்கள் எங்கே செல்ல முடியும்” என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். அன்று இரவு ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ்க்கு தூக்கம் வரவில்லை. தனது மாணவர்கள் ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டார். ஆகவே ஐந்தாவது வகுப்பு படிக்கும் 3 மாணவி உள்பட 10 மாணவர்களை விமானத்தில் சென்னை அழைத்துச் சென்று வண்டலூர் மிருகாட்சி சாலையை காண திட்டமிட்டார். இதற்காக நாளும் குறிக்கப்ட்டது 22.03.2025 அன்று காலை 6 மணிக்கு கிளம்பும் விமானத்தில் முன்பதிவு செய்தார்.
தன்னிடம் 5 ஆம் வகுப்பு படிக்கும் பத்து மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் 7 பேர், மற்றும் இரண்டு பெற்றோர்களை அழைத்துக்கொண்டு அவர் தூத்துக்குடியில் இருந்து சென்னை கிளம்ப திட்டமிட்டார். சென்னையில் இறங்கும் அவர்கள் மின்சார ரயில் மூலம் வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு சென்று, அங்கே பகல் முழுவதும் மிருகங்களை பார்த்துவிட்டு, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலமாக எக்மோர் வந்து அங்கிருந்து முத்து நகர் எக்ஸ்பிரஸில் தூத்துக்குடி திரும்புகிறார்கள்.
மாணவர்களின் கனவை நிறைவேற்ற ஆசிரியர் தனி ஒருவர் சுமார் 1,50 லட்சம் செலவு செய்து தனது மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை அழைத்துக்கொண்டு விமானத்தினையும், ரயில் போக்குவரத்தினையும், மிருக காட்சியையும் பார்க்க வைக்க நடவடிக்கை எடுத்து இருப்பது, மிகச்சிறப்பான செயலாகும். இவரை நாம் பாராட்டியே தீரவேண்டும்
மக்கள் கருத்து
NELSON PONRAJ SMar 23, 2025 - 05:23:21 PM | Posted IP 162.1*****
அன்புடன் வாழ்த்தி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.
KOILPITCHAI MANOHARMar 22, 2025 - 04:02:51 PM | Posted IP 172.7*****
CONGRATULATIONS ANNAN 🙏👍
பிரான்சிஸ்Mar 22, 2025 - 10:27:27 AM | Posted IP 172.7*****
வாழ்க வளமுடன் ஐயா நெல்சன் அவர்கள் பணி....
D. DHARSON KUMARMar 21, 2025 - 11:06:55 PM | Posted IP 104.2*****
எங்க ஊர் சார் எங்க ஊரு பிள்ளைகளை விமானத்துல கூட்டிட்டு போகுறது எங்களுக்கு பெருமையா இருக்கு🤝🤝🤝
D. DHARSON KUMARMar 21, 2025 - 11:06:55 PM | Posted IP 172.7*****
எங்க ஊர் சார் எங்க ஊரு பிள்ளைகளை விமானத்துல கூட்டிட்டு போகுறது எங்களுக்கு பெருமையா இருக்கு🤝🤝🤝
NIRANJAN KUMARMar 21, 2025 - 11:06:44 PM | Posted IP 172.7*****
In a heartwarming initiative, Nelson Ponraj, a dedicated school principal from Thoothukudi, personally funded a memorable trip for his students. He arranged for ten 5th-grade students, including three girls, to fly from Thoothukudi to Chennai on March 22, 2025. The itinerary included visits to the Vandalur Zoo, a ride on the electric train, and a metro journey to Egmore, providing the students with enriching experiences they had previously only dreamed of. Nelson's commitment to his students extends beyond this trip. Since joining the teaching profession in 2000, he has consistently supported underprivileged students by providing uniforms, shoes, ties, and ID cards, elevating their educational experience. His efforts have garnered widespread appreciation, with the community lauding him as a "loving teacher" and the Tamil Nadu government honoring him with the Best Teacher Award. While specific comments from the article's webpage aren't accessible, it's evident that Nelson's actions have left a profound impact on both his students and the broader community, exemplifying the profound difference one dedicated educator can make.
MmmmMar 21, 2025 - 06:28:52 PM | Posted IP 104.2*****
இந்த தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரு முன் மாதிரி, வாழ்த்துக்கள் ஐயா..
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

ஒருவன்Mar 24, 2025 - 09:04:22 AM | Posted IP 162.1*****