» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

மாமன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் ராம சீனிவாசனை சந்தித்து அனைத்து ஊர் பரத குல ஊர்கமிட்டியினர், தேர் மாறன் மீட்புக் குழு, முத்துக்குளித்துறை பரதநல தலைமை சங்கத்தினர், தமிழ்நாடு வணிகர் நல சங்கத்தினர், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றத்தினர், குரூஸ் பர்னாந்து மக்கள் பேரவை நிர்வாகிகள் மனு அளித்தனர.
அதில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும் 16ஆம் மாமன்னருமான தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரத வர்ம பாண்டியன் (என்ற) தேர்மாறன் வரைபட ஓவியத்தை தூத்துக்குடியில் புதிதாக புனரமைக்கப்படும் விமான நிலையத்தில் வைக்க கோரியும், அவரது உருவம் பதித்த தபால் தலை மத்திய அரசால் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

SivaSriMar 22, 2025 - 11:39:04 AM | Posted IP 172.7*****