» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முத்துநகர் கடற்கரையில் ஐ லவ் தூத்துக்குடி வாசகம் மீண்டும் அமைக்க கோரிக்கை!!

ஞாயிறு 23, மார்ச் 2025 9:08:58 AM (IST)



தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஐ லவ் தூத்துக்குடி வாசகத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் வழக்கறிஞர் சுப.மாடசாமி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் I love Tuty என்கிற வாசகம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த வாசகமானது கடற்கரையை ஒட்டி மையப் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு வரக்கூடிய பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்திருந்தது. 

மேலும் இந்த முத்துநகர் கடற்கரையை அலங்கரிக்கும் விதமாக மேற்படி வார்த்தை அமைந்துள்ளதால் அந்த இடத்தில் வருகின்ற நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்ற நபர்களும் பொழுதுபோக்கு வருகின்ற பயணிகளும் செல்பி பாயிண்ட் எனும் படம் எடுக்கக்கூடிய இடமாக அதனை பயன்படுத்தி வந்தார்கள். 

தற்போது அந்த இடத்தில் உள்ள ஐ லவ் தூத்துக்குடி என்கிற வாசகம் அகற்றப்பட்டுள்ளது. முத்துநகர் கடற்கரை பிரியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மாநகர நிர்வாகம் உடனடியாக ஏற்கனவே உள்ளது போல அந்த இடத்தில் ஐ லவ் தூத்துக்குடி என்று அமைத்து பயணிகள் நலன் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

இது எங்கMar 23, 2025 - 10:12:24 AM | Posted IP 172.7*****

எவனாவது ஆட்டைய போட்டுட்டு போய்ட்டானா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory