» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூரில் கரை ஒதுங்கும் கடல் முள்ளெலிகள்

ஞாயிறு 23, மார்ச் 2025 9:17:29 AM (IST)



திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன.

கடல் முள்ளெலிகள் சிறிய கூா்மையான முள்கள் கொண்ட, கோள வடிவம் உடையவை. கடல் வாழ் விலங்கினமான இவை, கடல் ஊமத்தை என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் உடலில் உள்ள முள்களுக்கு ‘மூராங்குச்சி’ என்ற பெயரும் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும்.

கடந்த சில நாள்களாக திருச்செந்தூா் கடற்கரையில் ஏராளமான கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றை கடற்கரை பாதுகாப்பு குழுவினா் பிடித்து நடுக்கடலில் விடுகின்றனா்.


மக்கள் கருத்து

Kvp girlMar 23, 2025 - 10:14:23 AM | Posted IP 172.7*****

கரை எதுக்கு ஒதுங்குதுன்னு கண்டு புடிங்கடா மொதல்ல 😴😴

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory