» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர் கருப்பசாமி பாண்டியன் : எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!
வியாழன் 27, மார்ச் 2025 10:33:45 AM (IST)

நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன் (76). அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக இருந்து வந்த இவர், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சமீப காலமாக கருப்பசாமி பாண்டியனுக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு இருந்து வந்தாலும், கட்சி பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்தார்.
கடந்த 1 வாரமாக உடல்நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை திருத்து கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கருப்பசாமி பாண்டியன் மகனும், அ.தி.மு.க. மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளருமான வி.கே.பி. சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, நெல்லை மாநகர் மாவட்ட செயலா ளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செய லாளர் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன்பின்னர் எடப் பாடி பழனிசாமி நிருபர் களிடம் கூறியதாவது: போற்றுதலுக்கும், மிகுந்த மரியாதைக்கும் உரிய கருப்பசாமி பாண்டியன் தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவர். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரது காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார். கட்சியை உயிராக நேசித்த வர். தென் மாவட்ட மக்களிடம் மிகவும் மரியாதைக் குரியவராக இருந்தவர்.
எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மாவட்ட செயலராக இருந்தவர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் துணை பொதுச் செயலாளராக திறம்பட பணியாற்றியவர். அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது என்னை நேரில் சந்தித்து எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சேர்த்தவர். அவ ருடைய நினைவெல்லாம் கட்சிதான். அவருடைய இழப்பு அ.தி.மு.க.விற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும், உற்றார்-உறவினருக்கும், தென் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி னார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், துணைச்செய லாளர் வீரபெருமாள், முன்னாள் எம்.பி.க்கள் முத்துகருப்பன், சவுந்தர் ராஜன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், பொருளாளர் ஜெயபாலன், துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், அணி செயலாளர்கள் ஜெயலலிதா பேரவை ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்றம் பால் கண்ணன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
