» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: குடும்பத்தினர் கண்முன்னே சோகம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:55:52 AM (IST)
சேரன்மாதேவியில் தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தினர் கண்முன்னே இந்த சோகம் நிகழ்ந்தது.
சேரன்மாதேவி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி லலிதா (40). இவர்களுக்கு கல்பனா (18), லட்சியாதேவி (14) ஆகிய 2 மகள்கள் உண்டு. கல்பனா, நெல்லையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சியாதேவி, சேரன்மாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
ரம்ஜான் விடுமுறை நாளான நேற்று லட்சியாதேவி பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. மாலையில் முத்துகுமார் மனைவி, மகள்களுடன் ஆட்டோவில் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அவர்கள் ஆற்றில் குளித்து விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சேரன்மாதேவி சார்நிலைக் கருவூவலம் அருகில் சென்றபோது, குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலையோரம் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் போன்றவற்றை குவித்து வைத்திருந்தனர். அந்த வழியாக ஆட்டோ சென்றபோது எதிர்பாராதவிதமாக மணல் குவியலில் ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லட்சியாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சேரன்மாதேவி போலீசார் விரைந்து சென்று, இறந்த லட்சியாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேரன்மாதேவியில் தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
