» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:09:33 PM (IST)
தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..
தென்காசி சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் செயல் அலுவலர் முருகனின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது.
காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு நாள்தோறும் பணிகளை செய்தால் மட்டுமே ஏப்ரல் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக பணிகளை முடிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிசேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும்,
அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்த வழக்கின் விசாரணை நாளையும் நடைபெற உள்ள நிலையில் அதுவரை தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
