» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா: ரூ.96.52 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:30:51 PM (IST)

திருநெல்வேலியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் ரூ.96.52 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கலைவானர் அரங்கில் இன்று (14.04.2025) அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாள் விழா - சமத்துவ நாள் விழாவினை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் இன்று (14.04.2025) நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் என்.ஒ.சுகபுத்ரா துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறைகள் சார்பில் 1384 பயனாளிகளுக்கு ரூ.96.52 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைவரும் ஏற்று கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 90 பயனாளிகளுக்கு வீட்டுமணை பட்டா, தையல் இயந்திரம், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஒய்வூதியம் கல்வி உதவித்தொகை, தீருதவித்தொகை போன்ற உதவிகளும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.80.22 இலட்சம் மதிப்பில் பழங்குடியினர் வீட்டுத் திட்டத்தில் வீடுகளும், தாட்கோ சார்பில் 861 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 85 பயனாளிகளுக்கு இ-பட்டா, பட்டா மாறுதல், சான்றிதழ்களும்,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் மகளிர் திட்டம் சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் வட்டார வணிக மையம், வங்கி கடன் இணைப்புகளும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.31.63 இலட்சம் மதிப்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் நிதியுதவிகளும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.63.60 இலட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்களும், பசுந்தாள் உரங்களும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு 75 ஆயிரம் மதிப்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நிரந்தர பந்தல் அமைப்பதற்கான நிதியுதவியும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.36.03 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பில் பெண் குழந்தை பாதுகாப்பு முதிர்வு தொகையும், மாநகராட்சி சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.6.23 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார பிரிவு நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பணிப்பாதுகாப்பு உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 69 பயனாளிகளுக்கு ரூ.61.69 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வழங்கப்படும் 8 கிராம் தங்க நாணயம், அலைபேசி, இரு சக்கர வாகனம் என மொத்தம் 1384 பயனாளிகளுக்கு ரூ.96.52 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் சமத்துவ நாள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதில் மேலப்பாளையம் நயினார் மஹாலில் நடைபெற்ற விருந்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் இலக்குவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அன்பழகன், மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, பிரான்சிஸ், மகேஸ்வரி, கஜிதா இக்லாம் பசிலா, முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
