» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவலரின் தாயை கொலை செய்து நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:35:37 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே காவலரின் தாயை கொலை செய்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்த ஜெயபால் மனைவி வசந்தா (70). மகன் விக்ராந்த், நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வசந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
