» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோவில் திருவிழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
புதன் 16, ஏப்ரல் 2025 8:35:47 AM (IST)
பாபநாசம் கோவில் திருவிழாவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் பூப்பல்லக்கு, தீர்த்தவாரி, தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
மேலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுபோதையில் வந்த 3 வாலிபர்கள், பெண்களை அச்சுறுத்தும் விதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை அங்குள்ள தனியார் மண்டபம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், மாரியப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பிற்கு நின்ற மற்ற போலீசார், 3 பேரையும் சுற்றிபிடித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாபநாசம் டானா காளிபார்விளை தெருவை சேர்ந்த அப்துல்காதர் மகன் காஜி (22), சாகுல் மகன் ரியாஸ் (20), விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சாதிக்பாட்ஷா மகன் இலியாஸ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
