» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு கேபிள் டிவி எச்டி செட் டாப் பாக்ஸ்கள் வாங்கி தொழில் துவங்க கடனுதவி
திங்கள் 21, ஏப்ரல் 2025 5:24:18 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவன HD செட் டாப் பாக்ஸ்கள் வாங்கி தொழில் தொடங்குவதற்கான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில் இன்று (21.04.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவி வட்டத்திலுள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வங்கி கடனுதவி வாயிலாக அரசு கேபிள் டிவி நிறுவன HD செட் டாப் பாக்ஸ் வழங்குவதற்கான ஆணை மற்றும் HD box -களை வழங்கினார்கள். மேலும், பொது மக்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவன HD செட் டாப் பாக்ஸ்கள் குறித்த விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்நிகழ்வில் வீரவநல்லூர் ஆறுமுகம், உலகநாதன், ஆரைக் குளம் வினோத் மற்றும் தருவை கிராமத்தை சேர்ந்த மந்திரி ஆகியோருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக தலா ரூ.50000 வங்கி கடன் மூலமாக மொத்தம் 400 HD boxes வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், தனி வட்டாட்சியர் செல்வன், சென்னை தலைமை அலுவலக துணை மேலாளர் மாரிமுத்து உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
