» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)
மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற மே 1ஆம் தேதி மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு : அரசாணை எண்.1 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VI) துறை நாள்: 03.01.2012, அரசாணை எண்.50 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VIII) துறை நாள்: 29.10.2012, அரசாணை எண்.32 உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VIII)துறை நாள்: 24.05.2013 மற்றும் சென்னை, ஆணையர், மதுவிலக்கு மற்றும் ஆயம் கடிதம் எண்.P&E2(1)/129/2017, நாள்: 23.04.2025 ஆகியவற்றின்படி 01.05.2025 (வியாழக்கிழமை) மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் 01.05.2025 (வியாழக்கிழமை) மே தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
