» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குலசை கடற்கரையை விரிவு படுத்தவேண்டும் : ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 14, ஜூலை 2025 3:28:48 PM (IST)
குலசேகரன்பட்டினம் தசாரா திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையை விரிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தெடர்பாக சமூக சேவகர் ராமச்சந்திரன் புலவர் என்பவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துகுடி மாவட்டம் கன்னியாகுமரி சாலை வழி திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தி முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நேரத்தில் பக்தர்கள் அலை அலையாய் வருகின்றார்கள். இந்த வேளையில் இடம் பற்றாகுறையினால் பக்தர்கள் அவதிபடுகிறார்கள்.
இதை சரி செய்ய கடல் கரையை விரிவு படுத்தி (Beach) அங்கே பேருந்து வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். கோவிலுக்கு பின்னால் மணப்பாடு கூடல் நகரில் ஏவுகணை தளம் ஆரம்பமாக இருக்கிறது. உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள், திருச்செந்தூர் சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கடற்கரையை விரிவு படுத்துவதால் இந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் வசதியாக இருக்கும்.
இந்த மூன்றும் அமைவதால் அரசாங்கத்திற்கு வருமானமும் பொது மக்களுக்கு கோவிலுக்கும் கடற்கறைக்கும் செல்ல வசதியாக இருக்கும். அக்டோபர் 2023ல் நடந்த திருவிழாவில் சுமார் இருபது லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இந்த எண்ணிக்கை வருடா வருடம் கூடிக்கொண்டே இருக்கிறது. கடற்கரையை விரிவு படித்தினால் பக்தர்கள் ஒன்றாக இருந்து திருவிழாவினை கண்டுகழிக்க வசதியாக இருக்கும்.
கடற்கரைக்கு பேருந்து செல்லும் வழிதடம் காமராஜ் நகர் வழியாக கடற்கரை, மேல் மலையான் தெரு (முத்தாரம்மன் கோவில் பின்புரம்). குலசை ரைஸ்மில், குலசை காவல் நிலையம் ஏற்கனவே சாலை வசதி இருப்பதால் இதனை அமுலுக்கு கொண்டுவர வசதியாக இருக்கும். இது தொடர்பாக ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

M BabuJul 14, 2025 - 07:10:16 PM | Posted IP 162.1*****