» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!

புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியதில் மூன்று பயணிகள் காயம் அடைந்தனர். 

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியை சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டிதுரை (29) என்பவர் 4வது நடைமேடையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் பாண்டிதுரையை தாக்கினார். 

தொடர்ந்து, அதே நடைமேடையில் நின்றிருந்த மேலும் 2 பேரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.காயமடைந்த மூவரையும் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற 2 பேரின் விவரங்கள் தெரியவில்லை; அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவம் குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் தச்சநல்லூா் ரயில்வே பாலம் அருகே நின்ற உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீசார்  பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory