» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)



பாளையங்கோட்டையில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வாகன பிரச்சாரம் மற்றும் பேரணியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் விளையாட்டு அரங்கில் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள், மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வாகன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (23.10.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

வடக்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்தும், மழைநீரை சேகரிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மழைநீர் சேகரிப்பதால் நிலத்தடி நீர் உயரும், மண்வளம் பெருகும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட குறும்படங்களை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, "காப்போம் காப்போம் குடிநீரின் தரத்தை காப்போம், விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்துளி, வானத்தின் மழைத்துளி வையகத்தின் உயிர்துளி, மதிப்போம், மதிப்போம் மழைநீரை மதிப்போம், பெருவோம் பெருவோம் மாசற்ற நீரை பெருவோம், ஏற்போம் ஏற்போம் வையகத்தை காக்க சபதம் ஏற்போம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவியர்கள் பாளையங்கோட்டை வ.உசி மைதானத்தில் தொடங்கி பாளை பேருந்து நிலையம், வழியாக தூய சவேரியார் கல்லூரி வரை சென்று நிறைவுப்பெற்றது.

நிகழ்ச்சியில், குடிநீர் வழங்கல் துறை நிர்வாக பொறியாளர் வே.ராமலெட்சுமி , உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நில நீர் ஆய்வாளர் மற்றும் மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் இக்னெசியஸ் கான்வென்ட், சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory