» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை

சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாநகர ஆயுதப்படையில் முத்தரசி (43) என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி பாலகணேஷ் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். பாலகணேஷ், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் முத்தரசி தனது இரண்டு குழந்தைகளுடன் நெல்லை மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்தார்.

இவர் கடந்த 2006-ம் ஆண்டு போலீஸ் துறையில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். கணவர் இறந்தது முதல் மிகுந்த சோகத்துடனே முத்தரசி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்தரசி நேற்று மதியம் ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திடீரென சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்தபோது முத்தரசி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முத்தரசியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory