» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செய்வதாக கூறி, செல்போன் எண் மூலம் ஓ.டி.பி. எண் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு முன் அச்சிடப்பட்ட பட்டியலை வழங்கினார்கள். அந்த பட்டியலை பூர்த்தி செய்து வாங்கும் பணியும் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட பட்டியலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளனர்.

அந்த செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எனப்படும் கடவுச்சொல் அனுப்பி உள்ளதாகவும், அதை சொல்லுமாறு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டு மோசடி முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு யாரும் ஓ.டி.பி. எண் கேட்டால் வழங்க வேண்டாம், ஓ.டி.பி வழங்க மறுத்து விடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் சார்பிலும் இதுபோன்று எந்தவித ஓ.டி.பி.யும் வாக்காளர் செல்போன் எண்ணுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory