» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 7:48:43 PM (IST)
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம், கட்டப்புளியை சேர்ந்த பாபநாசம் (75) என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு 8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, பாபநாசத்தை கைது செய்தனர்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரனையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று (25.11.2025) குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா, அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 25 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:55:30 PM (IST)

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:43:37 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 46.42 சதவீதம் படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:02:21 AM (IST)

தென்காசி விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு : பஸ்சின் உரிமம் ரத்து!
செவ்வாய் 25, நவம்பர் 2025 8:38:27 AM (IST)

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு மீது நவ.27ல் விசாரணை!
திங்கள் 24, நவம்பர் 2025 5:19:39 PM (IST)

தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மன வேதனை அளிக்கிறது: விஜய் இரங்கல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:05:34 PM (IST)




