» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.2 இலட்சம் நன்கொடை!

செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:15:31 PM (IST)



நெல்லை அரசு பாலிடெக்னிக் கல்லூரியினை மேம்படுத்துவதற்கு முன்னாள் மாணவர்கள் ரூ.2 இலட்சம் மதிப்பிலான பல்வேறு உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்டம் கொங்கந்தான் பாறை திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் IRT பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூடுகை மற்றும் வெள்ளி விழா நடைபெற்றது. (1997-2000)-ம் ஆண்டு இக்கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த 120 மாணவர்களில் 50 முன்னாள் மாணவ மாணவியர் குடும்பத்துடன் கலந்து கொண்டு வெள்ளி விழாவை கொண்டாடினர். இவர்களுடன் (1992-1995)-ம் ஆண்டு இக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற முதல் குழு மாணவ மாணவியர்களும் இணைந்து கொண்டு தங்கள் கடந்த கால கல்லூரி அனுபவங்கள் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.

கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் முன்னாள் மாணவர்களில் பெரும்பாலர் Ashok Leyland, L&T, Johnson lift, Bion, DCW, TVS போன்ற தனியார் நிறுவனங்களில் உயர்பதவி வகிக்கின்றனர். சிலர் மேற்படிப்பு பயின்று தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, ONGC போன்ற அரசு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஒரு சிலர் தொழில் முனைவோராக சாதனை படைத்து வருகின்றனர்.

விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் இந்த கல்லூரியின் நலனுக்காகவும் இங்கு பயிலும் மாணவ மாணவியரின் பயன்பாட்டுக்காகவும் R.O systems, PA systems, LCD projector, furniture, Computers, printers, oscilloscope என சுமார் ரூ.2 இலட்சம் மதிப்பிலான பல்வேறு உபகரணங்களை நன்கொடையாக கல்லூரியின் வளர்ச்சிக்காக வழங்கினார்கள்.

கல்லூரி முதல்வர் மார்ஜரி தியோடர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மின்சார வாரியத் துறையில் உதவி இயக்குனர், கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்டீபன் இம்மானுவேல் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில், ரமேஸ் குமார், பேராசிரியர் மாணிக்கவாசகம், பேராசிரியை சகாய வினிபிரெட் ரஜினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு தங்கவேல் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர் சங்க செயலாளர் சேது ராமலிங்கம், இணை செயலாளர் விஜய பாஸு ஆகியோர் மேற்கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory