» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)

திருநெல்வேலியில் வருகிற 21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் 21.01.2026 புதன்கிழமை அன்றுகாலை 10.00 மணி முதல் 4.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

மேற்காணும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் ஐடிஐ பயின்று தேர்ச்சிப்பெற்ற பயிற்சியாளர்கள் கலந்து கொள்ளலாம். இதில் மத்திய/மாநில அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேவையான பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், 10ம்/12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொள்ளவிருக்கும் தொழிற் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்பழகுநர்களை தேர்வு செய்யும் பொருட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது பங்கேற்பினை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன்; பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0462-2342432 / 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory