» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் 20 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நெல்லைக்கு புதிய போலீஸ் கமிஷனர் நியமனம்!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:25:05 AM (IST)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை: ஆயுதப்படை டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை கமிஷனர்: ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், திருநெல்வேலி மாநகரக் காவல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐ.ஜி: ஆவடி கூடுதல் கமிஷனராக இருந்த பவானீஸ்வரி, சென்னை தலைமையக ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.
டி.ஐ.ஜி மாற்றங்கள்: நெல்லை கமிஷனராக இருந்த என்.மணிவண்ணன் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாகவும், கோவை சரக டி.ஐ.ஜி வி.சி.மோகன் திண்டுக்கல் சரகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதர முக்கிய நியமனங்கள்:
எச்.எம்.ஜெயராம்: சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக நியமனம்.
ஏ.ஜி.பாபு: போலீஸ் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்பி-க்கள் இடமாற்றம்: திருச்சி, சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் எஸ்.பி-க்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு எஸ்.பி-யாக அய்மன் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

